×

எம் ஆதார் செயலிக்கு பதிலாக புதிய ஆதார் செயலி அறிமுகம்..!

 

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI – Unique Identification Authority of India) இணையதளத்திற்கோ அல்லது ஆதார் செயலியையோ பயன்படுத்தலாம். இதற்காக முன்னதாக எம் ஆதார் செயலி (mAadhaar) பயன்பாட்டில் இருந்த நிலையில், அது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கு பதிலாக புதியா ஆதார் செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தேவையற்ற இடங்களில் ஆதார் விவரங்களை பகிர்வதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டுள்ளது. ஒரு உணவகத்தில் தங்குவதற்கோ, வயது சரிப்பார்ப்புக்கோ, ஓடிபி பெறுவது உள்ளிட்டவற்றுக்கோ தேவையான விவரங்களை தவிர மற்ற விவரங்கள் பகிரப்படுவதை தடுக்க தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?

  • கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோருக்கு செல்ல வேண்டும்.
  • செயலியை பதிவிறக்கம் செய்து நீங்கள் எந்த மொழியில் பயன்படுத்த உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • பிறகு ஆதார் உடன் இணைக்கப்பட்ட உங்களது மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
  • பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை பயன்படுத்து வெரிஃபை செய்ய வேண்டும்.
  • பிறகு அந்த செயலி உங்களை Face Authentication செய்ய கூறும். அதனை செய்து முடிக்க வேண்டும்.
  • பிறகு செயலிக்கு 6 இலக்க பின் எண்ணை செட் செய்ய வேண்டும். கூடுதல் பாதுகாப்புக்காக பயோமெட்ரிக் லாக் செட் செய்துக்கொள்ளலாம்.
  • தேவையான ஆதார் விவரங்களை உள்ளிட்டு மீண்டும் ஓடிபி வைத்து வெரிஃபை செய்ய வேண்டும்.
  • வெரிஃபிகேஷம் முடிந்ததும் உங்களது கணக்கு செயல்பாட்டு வந்துவிடும். அந்த செயலி மூலம் நீங்கள் சேவைகளை பெற தொடங்கலாம்.