×

NET தேர்வு வரும் செப்.24 முதல் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி மற்றும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை விண்ணப்பிக்க, தேசிய அளவிலான தகுதித் தேர்வான NET தேர்வில் தேர்ச்சி பெறுதல் கட்டாயம். National Testing Agency ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதாவது ஆண்டுக்கு இரண்டு முறை இத்தேர்வை நடத்துகிறது. நெட் தேர்வில் இரண்டு தாள்கள் இடம்பெறும். இரண்டு தாள்களிலும் கொள்குறி தேர்வு முறை கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கான 50 கேள்விகளும்,
 

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி மற்றும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை விண்ணப்பிக்க, தேசிய அளவிலான தகுதித் தேர்வான NET தேர்வில் தேர்ச்சி பெறுதல் கட்டாயம். National Testing Agency ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதாவது ஆண்டுக்கு இரண்டு முறை இத்தேர்வை நடத்துகிறது. நெட் தேர்வில் இரண்டு தாள்கள் இடம்பெறும். இரண்டு தாள்களிலும் கொள்குறி தேர்வு முறை கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கான 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கான 100 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.

கொரோனா பாதிப்பால் ஜூன் மாதம் நடைபெறவிருந்த NET தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிட தகுதிக்கான NET தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.