×

“மாமியாருக்கு காது கேட்காததால் தப்பித்த குடும்பம்”- நேபாளத்தில் நெகிழ்ச்சி

 

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான திடீர் வெள்ளத்தில், சுற்றியிருந்த அனைத்து கட்டிடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும், ஒரே ஒரு பச்சை நிற (டர்க்காய்ஸ்) வீடு மட்டும் உடையாமல் கம்பீரமாக நின்ற வீடியோ சமூக ஊடகங்களில் உலக அளவில் பெரும் வைரலானது.

நேபாள வெள்ளத்தில் உடையாமல் நின்ற வைரல் `பச்சை வீட்டின்' உரிமையாளர் லஷ்மி பாண்டே கூறுகையில், “வெள்ளம் வந்த போது நானும் என் கணவரும் பக்கத்தில் உள்ள எங்களின் கடையில் இருந்தோம். வெள்ளம் அதிகமான போது என் மாமியாரையும் குழந்தைகளையும் காப்பாற்றத்தான் வீட்டுக்கு ஓடி வந்தோம். `கீழே வாருங்கள்’ என்று நான் கத்தியது மாமியாருக்கு கேட்கவில்லை. அதனால்தான் நாங்கள் மேலே போனோம். வெள்ளம் நம்மை அடித்து செல்லப் போகிறது என்று நான் சொன்ன போது என் மாமியார் அப்படியெல்லாம் நடக்காது என்றார். அதே போல் நாங்கள் காப்பாற்றப்பட்டது கடவுளின் செயல்தான்

வெள்ளம் வந்த போது எங்கள் வீட்டு மாடியில் நாங்கள் 6 பேர் இருந்தோம். பக்கத்து வீடு இடிந்து விழுந்த போது ரொம்பவே பயந்துவிட்டோம். எங்கள் வீடு மட்டும் இடிந்து விழாதது கடவுளின் செயல்தான். ஆனால், அதற்கு முன்பே 4-5 பேர் சேர்ந்து தங்கள் உயிரை பணையம் வைத்து எங்களை மீட்டு விட்டனர். நாங்கள் இப்போது மறுபிறவி எடுத்துள்ளதாக நினைக்கிறோம். இறைவன் எங்களுக்கு ஒரு செகண்ட் சான்ஸ் கொடுத்து இருக்கிறார்” என்றார்.