×

மரியாதை கிடைக்கும் இடத்தில் கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த்

 

 2026 தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன். மரியாதை கிடைக்கும் இடத்தில் கூட்டணி அமைப்பேன் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த் பிரேமலதா, “நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெற்று வரும் பொழுது தாமிரபரணியை சரி செய்வோம். சட்டம் ஒழுங்கை நிச்சயமாக காப்பாற்றுவோம். பீகாரில் இருந்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.இனிமேல் யாருக்கும் இதுபோல் தமிழகத்தில் நடக்கக்கூடாது. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு தான் நமக்கு எல்லாருக்கும் தெரியும். பீகார் பெண்ணின் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும். 

நெல்லையில் ஒருவரை ஒருவர் மாணவர்கள் கத்தியை எடுத்து வெட்டும் சூழ்நிலை இருக்கிறது.இதற்கெல்லாம் போதை கலாச்சாரம் தான் காரணம்.சட்டம் ஒழுங்கு தடுக்கப்பட வேண்டும். மதுரையில் நடைபெற்ற ஒரு சம்பவம் விபத்து என்று முடிக்க பார்த்தார்கள். அதன் பிறகு அதைப்போல என்று கண்டறிந்தார்கள். டாஸ்மாக் என்பது பல ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது அதை தடுக்கப்பட வேண்டும். ஸ்டெர்லைட் பிரச்சனையில் யாரெல்லாம் கையூட்டுப் பெற்றிருக்கிறார்கள் என்ற லிஸ்ட் எடுத்து பாருங்கள். அதில் தேமுதிக இருக்கிறதா என்பதை கூறுங்கள். 2026 தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன். யாரெல்லாம் களத்தில் இருக்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும்.தமிழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை கட்சிகளும் தோழமைக் கட்சிகள் தான். எங்களுக்குரிய மரியாதை நியாயம் யாரிடம் கிடைக்கிறதோ அங்கேதான் நாங்கள் கூட்டணி வைப்போம். குடும்பத்தில் நடைபெறும் ஆலோசனையை எப்படி பொது வெளியில் சொல்ல முடியும்? மக்களுக்காக நாங்கள் சட்டசபைக்கு சென்று போராடுவோம்” என்று கூறினார்.