☰
×

"ஹெலிகாப்டரும் வரல, கோஸ்ட் கார்டும் வரல!" – அமைச்சர் ஸ்ரீநாத் முகத்திற்கு நேராக பொங்கி எழுந்த இளைஞர்!

மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர் ஸ்ரீநாத் முன்னிலையிலேயே பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் அதிகாரிங்களை பார்த்து.. பொதுமக்களில் ஒருவரான இளைஞர் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்புகிறார்.. "மீட்புப் பணிக்காகக் கடலோரக் காவல் படையோ, ஹெலிகாப்டரோ ஸ்பாட்டுக்கு வரவே இல்லை. யாருமே போகாமல், போனோம் போனோம்னு பொய் சொல்றீங்க. மீன்வளத்துறை ஏடி அலுவலகத்தின் அலட்சியத்தால்தான் இந்த ஒன்பது உயிர்களும் போயிருக்கு. நாளைக்கு பார்க்கலாம், நாளைக்கு பார்க்கலாம் என்று இழுத்தடித்தார்களே தவிர, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது இன்னும் ஏன் எந்த நடவடிக்கையோ அல்லது சஸ்பெண்டோ செய்யவில்லை? என்று அடுக்கடுக்காகப் பொங்கி எழுகிறார்.

இவ்வளவு பெரிய விபத்து நடந்த பிறகும் கூட ஒரு வார்த்தை பேசாமல் கள்ள மௌனம் சாதிப்பது மீனவ மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மீன்வளத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் அவர்களே, இந்தத் துறையின் பொறுப்பை ஏற்ற பிறகு, மீனவர்களின் உண்மையான பிரச்சினைகளை நேரில் அறியவும், அதிகாரிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும், நிரந்தரத் தீர்வுகளை உருவாக்கவும் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள்? அதிகாரிகள் செய்ததாகச் சொல்வது ஒருபுறம்; பாதிக்கப்பட்ட மக்கள் அதை ஏற்க மறுப்பது மறுபுறம். அப்படியானால், உண்மையில் யார் தங்கள் கடமையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள் என்பதை அரசு விசாரிக்க வேண்டாமா? முதலமைச்சரின் நம்பிக்கையைப் பெறுவது ஒரு விஷயம்; மக்களின் நம்பிக்கையைப் பெறுவது வேறு விஷயம். மீனவர்களின் துயரத்தைப் புரிந்துகொள்ளாத அமைச்சுப் பொறுப்பால் என்ன பயன்? மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டம் எங்கே? அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் எங்கே? பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு எங்கே? மீனவர்களுக்கு வாக்குறுதிகள் மட்டும் போதாது; களத்தில் தெரியும் செயல்பாடுகள்தான் தேவை. தமிழக அரசே, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்! #மீனவர்கள் #மீனவர்கள்நலன் #தமிழகஅரசு #பொறுப்புக்கூறல் #மக்கள்உரிமை @CMOTamilnadu @TVKVijayHQ @annamalai_k @WTLFoundation

— Kp Kalaiarasan Villupuram (@AAdmk95861) November 6, 2026