×

நாளை நீட் மறுதேர்வு: தேர்வு மையத்திற்குள் வர 200 மீட்டர் வரை தடை..!

 

நீட் மறுதேர்வு நாளை 21ம் தேதி நடக்கிறது. தேர்வு சுமுகமாகவும், முறைகேடுகளும் இன்றி நடப்பதை தடுக்கும் வகையில், தேர்வு மையங்களை சுற்றி 200 மீ., பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு நேரத்தில் இப்பகுதியில் ஜெராக்ஸ் கடைகள், சைபர் சென்டர்கள் மூடப்பட வேண்டும். தேர்வு மையத்தை சுற்றி யாரும் தேவையின்றி நடமாட கூடாது. குழுக்களாக செல்ல கூடாது. இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களும் சரியான நேரத்தில் மையத்திற்கு வந்து விட வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.