×

வெளியானது நீட் மறுதேர்வு முடிவுகள்! 11.21 லட்சம் பேர் தேர்ச்சி.. மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்வது எப்படி?

 

தேசிய தேர்வு முக்காமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஜூன் 21- ஆம் தேதி நடந்த இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வை இந்தியாவில் 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்ட 5,440 தேர்வு மையங்களில் மொத்தம் சுமார் 20 லட்சம் எழுதியிருந்தனர். இதில் சுமார் 11.21 லட்சம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். குறிப்பாக, தேர்ச்சிப் பெற்றவர்களில் 58%- க்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர்.

138 மாணவ, மாணவிகள் 690- க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்றவர்களில் பெரும்பாலானோர் 17 முதல் 19 வயத்துக்குட்பட்டவர்கள். 93%- க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் முதன்முறையாக நீட் தேர்வை எழுதினர். இதில் 99% பேர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புச் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கான கால அட்டவணை திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதிச் செய்யும் வகையில், நீட் தேர்வு முடிவுகள் உரிய நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 58 சதவீதம் பேர் மாணவிகள்.பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவின் பன்ஷூல் ஆகியோர் 720க்கு 716 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் எடுத்துள்ளார்.138 பேர் 690 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். அதில் 93 சதவீதம் பேர் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றனர்.19 பேர் 700 மதிப்பெண்களுக்கு மேலும்1,492 பேர் 659க்கு மேலும்10,160 பேர் 600க்கு மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர்.500க்கு மேல் 90,780 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 1.7 லட்சம் பேரும், குறைவாக லட்சத்தீவு 43 பேரும் தேர்ச்சி பெற்றனர். 

தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?

  1. தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான nta.ac.in/NEET என்பதற்குச் செல்லவும்.
  2. முகப்புப் பக்கத்தில் புதிதாகக் கொடுக்கப்பட்டுள்ள NEET UG Re test Result என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  3. மாணவரின் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் திரையில் தோன்றும் பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்டு Submit என்பதை அழுத்தவும்.
  4. இப்போது திரையில் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் அகில இந்தியத் தரவரிசை விவரங்களுடன் கூடிய முடிவு காண்பிக்கப்படும்.
  5. இதனைப் பதிவிறக்கம் செய்து, மருத்துவச் சேர்க்கை நடைமுறைகளுக்காகப் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இந்தத் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மற்றும் இறுதிப் பட்டியல் வெளியான பின்னரே, மாணவர்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு நடைமுறைகள் மற்றும் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எனவே, மாணவர்கள் தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அடுத்த ஆண்டு (2027) முதல் கணினி முறையில் நீட் தேர்வு, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.