×

"Neet Exam எழுத முடியல.. அந்த போட்டோ தான் வேணும்னு சொல்றாங்க.." கனவு பறிபோன வேதனையில் மாணவன்

 

ராசிபுரம் அருகே தேர்வு நுழைவுச்சீட்டில் புகைப்படம் வேறுபட்டதாக கூறி  நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவில், நாமகிரிப்பேட்டை, உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் உட்பட 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 1,357 மாணவர்கள் நீட் தேர்வு எழுத ஏற்பாடுகள் நடந்தன. இதனிடையே நாமகிரிப்பேட்டை அரசு பள்ளிக்கு நீட் தேர்வு எழுத வந்த நாமக்கல் மாணவர் திவாகரை, தேர்வு நுழைவுச்சீட்டில் இருக்கும் புகைப்படம் வேறுபடுவதாக கூறி திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக செய்வதறியாமல் மாணவர் திவாகர் பரிதவித்தார். அதை கண்ட பிற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.