×

நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்வு! ஜிஎஸ்டியும் இருக்கு

இளநிலை மருத்துவப்படிப்புக்கு நுழைவு தேர்வான நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நீட் தேர்வு நடத்தவதற்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி,பட்டியலின பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் முன்னர் ரூ.2,750 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 

இளநிலை மருத்துவப்படிப்புக்கு நுழைவு தேர்வான நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நீட் தேர்வு நடத்தவதற்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி,பட்டியலின பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் முன்னர் ரூ.2,750 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 3,750 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.5,015 ஆக உயரத்தப்பட்டுள்ளது. அதேபோல் நீட் தேர்வுக்கான ஜிஎஸ்டி வரியாக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.765 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.