நீட் தேர்வு- மேலும் ஒரு மாணவர் தற்கொலை
இன்று நீட் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில் தேர்வு அச்சம் காரணமாக, தருமபுரி மாவட்டம் உம்மியம்பட்டி கிராமத்தை சேர்ந்த வெற்றியானந்தம் என்ற மாணவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 307 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெறவுள்ளது. சென்னையில் மட்டும் 43 நீட் மறுதேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் சுமார் 21,000 பேர் எழுதுகின்றனர். அனைத்து தேர்வு மையங்களிலும் சிசிடிவி கேமரா கண்காணிக்கப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகே மாணவர்கள் அனுமதிப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1.30 வரை தேர்வு மையங்களுக்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹால் டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படங்கள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நீட் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில் தேர்வு அச்சம் காரணமாக, தருமபுரி மாவட்டம் உம்மியம்பட்டி கிராமத்தை சேர்ந்த வெற்றியானந்தம் என்ற மாணவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நீட் அச்சம் காரணமாக தமிழகத்தில் 4 மாணவர்கள் விபரீத முடிவு எடுத்தது குறிப்பிடதக்கது.