'நீரதிகாரம்' நாவல் - நடிகர் சூர்யா வாழ்த்து
Feb 17, 2024, 11:55 IST
முல்லைப் பெரியாறு அணை. பென்னிகுக் எனும் பெரும் மனிதம் கொண்ட மாமனிதனின் விடா முயற்சியாலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பாலும் உருவான முல்லைப் பெரியாறு அணை கட்டுமானம், சாதாரணமாக நிகழ்ந்துவிட்ட ஒன்றல்ல என்பதை எழுத்தாளர் அ.வெண்ணிலா ஆனந்த விகடனில் 122 வாரங்கள் எழுதினார். தற்போது நீரதிகாரம் நாவலாக வெளியாகியுள்ளது. இதுத்தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'நீரதிகாரம்' நாவலுக்காக அ.வெண்ணிலா செலுத்தியிருக்கும் உழைப்பு பிரமிக்கவைக்கிறது.