×

ஊரடங்கு உத்தரவு விதி மீறல்.. ரூ.10 கோடியை நெருங்கும் வசூலிக்கப்பட்ட அபராதம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று மட்டும் 1,286 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,000ஐ எட்டியுள்ளது. இதனிடையே கொரோனாவில் இருந்து மக்களை காக்க கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை ஊரடங்கு அமலில் இருந்து
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று மட்டும் 1,286 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,000ஐ எட்டியுள்ளது. இதனிடையே கொரோனாவில் இருந்து மக்களை காக்க கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு விதிமுறைகளை மீறி செல்பவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.10 கோடியை நெருங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 4,45,256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.9.98 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் விதியை மீறி வெளியே சுற்றிய 5,78,100 கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகவும் 5,40,334 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.