×

#BREAKING தவெக 98- 120 இடங்களில் வெல்லும்- NDTV கருத்துக்கணிப்பு

 

அனைத்து கருத்துக்கணிப்பு நிலவரங்களும் தவெக விஜய்க்கு எதிராக அமைந்த நிலையில் NDTV நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் விஜய்க்கு சாதகமாக வந்துள்ளது.

வெளியாகி உள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் தமிழ்நாட்டில் திமுக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது என்றும் எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக உட்காருகிறது என்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 20 இடங்களுக்கும் குறைவாகவே கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மீண்டும் திமுக அதிமுக இடையில்தான் போட்டி என்பதை வெளியாகி உள்ள பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திட்டவட்டமாக கூறுகின்றன. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தலில் போட்டி திமுக மற்றும் தங்களுக்கு இடையில் தான் என தொடர்ந்து அவர் கூறி வந்த நிலையில், தற்பொழுது கருத்து கணிப்பு முடிவுகள் தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையில் தான் போட்டி என்பதாக சொல்கின்றது. தமிழ்நாடு தொடர்பான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் இருந்து நாம் தமிழர் கட்சியிலிருந்து இந்த முறை சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது

அனைத்து கருத்துக்கணிப்பு நிலவரங்களும் தவெக விஜய்க்கு எதிராக அமைந்த நிலையில் NDTV நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் விஜய்க்கு சாதகமாக வந்துள்ளது. அதன்படி, விஜயின் தவெக 98 முதல் 120 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக 92-110 இடங்களில் வெற்றி பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.