×

நீட் தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு 48 வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த என்டிஏ..!!

 

நாடு முழுவதும் இன்று நடைபெறும் முக்கியப் பொதுத்தேர்வையொட்டி (NEET), தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள் (Invigilators) பின்பற்ற வேண்டிய 48 அம்சங்கள் அடங்கிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

காலை 8:00 மணிக்கு கண்காணிப்பாளர்கள் அனைவரும் தேர்வு மையத்திற்கு வருகை தந்து, தங்களது அலைபேசிகளை ஒப்படைத்துவிட்டு, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும்.

காலை 11:00 முதல் மதியம் 1:30 மணி வரை தேர்வு மையத்தின் முதன்மை வாயில் (Main Gate) திறக்கப்பட்டு, தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர்.

ஆடை மற்றும் பொருட்கள் சோதனை (மதியம் 1:40 மணி வரை): முழு நீளக் கைகள் கொண்ட ஆடைகள் (Full sleeves), பெரிய பொத்தான்கள் அல்லது பதக்கங்கள் அணிந்திருக்கும் தேர்வர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

தேர்வர்கள் அட்மிட் கார்டு (அஞ்சல் அட்டை அளவு புகைப்படம் ஒட்டப்பட்டது), அசல் அடையாள அட்டை, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் வெளிப்படையான குடிநீர் பாட்டில் ஆகியவற்றை மட்டுமே எடுத்துவர அனுமதிக்கப்படுவர்.

மதியம் 1:40 மணிக்குத் தேர்வு வினாத்தாள் கட்டு தேர்வு எழுதும் மாணவர்கள் முன்னிலையில் (Test Booklet) பிரிக்கப்பட்டு, 1:50 மணிக்குத் தேர்வர்களுக்கு விநியோகிக்கப்படும்.

மதியம் 1:55 மணி: தேர்வர்கள் வினாத்தாளின் சீலை (Seal) உடைத்துப் பார்க்க அனுமதிக்கப்படுவர். அனைத்துப் பக்கங்களும் சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

மதியம் 2:00 மணி: தேர்வு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும்.

வீடியோகிராபி (மதியம் 2:15 - 4:30): தேர்வு அறைகளில் தேர்வர்களின் வருகை மற்றும் அட்மிட் கார்டு விபரங்கள் வரிசைப்படி வீடியோ பதிவு செய்யப்படும். இந்த நேரத்தில் தேர்வர்கள் தங்களது முகத்தை நேராக வைத்திருக்க வேண்டும்.

கடைசி 30 நிமிடங்கள்: மாலை 4:00 மணிக்கு மேல் தேர்வர்கள் யாரும் கழிவறை செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், தேர்வர்களின் அட்மிட் கார்டுகள் கண்காணிப்பாளர்களால் சேகரிக்கப்படும்.

மாலை 5:15 மணி: தேர்வு நிறைவடையும். அத்துடன் தேர்வர்கள் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு, OMR விடைத்தாள்கள் சேகரிக்கப்படும்.

மாலை 5:15 மணி: தேர்வு நிறைவடையும். அத்துடன் தேர்வர்கள் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு, OMR விடைத்தாள்கள் சேகரிக்கப்படும்.

OMR தாள்களைப் பிரித்தல் (மாலை 5:20 - 5:30): அசல் இளஞ்சிவப்பு நிற (Pink) OMR தாளும், அலுவலக நகலான நீல நிற (Blue) OMR தாளும் தனியாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனி உறைகளில் வைத்து சீல் வைக்கப்படும்.

மாலை 5:35 மணிக்கு மேல் தேர்வர்கள் தேர்வு அறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவர்.

மாலை 5:40 மணிக்குள் விடைத்தாள்கள் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுப் பொருட்களும் கட்டுப்பாட்டு அறையில் (Control Room) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவை உள்ளிட்ட 48 அம்ச வழிகாட்டுதல்களையும் எவ்விதத் தொய்வுமின்றி மிகத் துல்லியமாகப் பின்பற்றுமாறு தேசிய தேர்வு முகமை (NTA) கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது