ஆளுநர் விருந்தில் தேமுதிகவுடன் நயினார் நாகேந்திரன் கூட்டணி பேச்சுவார்த்தை?
ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசினர்.
குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் ஐஜேகே நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் பங்கேற்றார். இதேபோல் விருந்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள், தேமுதிகவை சேர்ந்த சுதீஷுடம் பேசியுள்ளார். தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சிகள் NDA கூட்டணியில் இணைவது குறித்த கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் எடுக்காத நிலையில், ஆளுநர் விருந்தில் தேமுதிகவுடன் நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. 1%க்கும் குறைவான வாக்குகளையே 2024ல் தேமுதிக பெற்றுள்ளது. கடைசி தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை வைத்து தான் கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படும்.விஜய்காந்த் காலத்தில் பெற்ற தொகுதிகள் இன்று கிடைக்காது என்ற நிலையில், கூட்டணி தலைமையிடம் தேமுதிக 20 தொகுதிகள் கேட்டு டிமாண்ட் செய்வதாக தெரிகிறது.
ஆளுநர் விருந்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “நண்பர் என்ற முறையில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் உடன் பேசினோம்” என்றார்.