×

தேசிய ஆசிரியர் விருது - தமிழகத்தில் இருவர் தேர்வு 

 

தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு  2 ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாப்பட்டு வருகிறது.   இந்த நாளில்  மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.  

தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி, திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகிய இருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.