தேசிய பத்திரிகையாளர் தினம் - ஓபிஎஸ், அண்ணாமலை வாழ்த்து!!
Nov 16, 2023, 14:55 IST
தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி ஓபிஎஸ், அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், தேசிய பத்திரிகையாளர் தினமான இன்று, அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பாலமாக விளங்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் @BJP4Tamilnadu சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண உதவுவதும், தவறுகள் நடப்பின் எடுத்துரைப்பதும், அதிகாரத்துக்கு அஞ்சாமல், வளைந்து கொடுக்காமல், நேர்மைத் திறம்படச் செயல்படுவதுமான ஊடகங்களின் கடமைகளை சிறப்புடன் தொடர வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.