×

நாளை நான் சென்னையில் இருப்பேன்… பிரதமர் மோடி ட்வீட்

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10.30 மணிக்கு சென்னை வருகிறார். இதனால் சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசு விழாவில்கலந்துகொள்ள சென்னை வரும் மோடி, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று, சென்னை, வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் , இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் போன்றவற்றை தொடங்கி வைக்கிறார். சென்னை வரும் மோடிக்கு அதிமுக – பாஜக சார்பில்
 

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10.30 மணிக்கு சென்னை வருகிறார். இதனால் சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசு விழாவில்கலந்துகொள்ள சென்னை வரும் மோடி, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று, சென்னை, வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் , இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் போன்றவற்றை தொடங்கி வைக்கிறார்.

சென்னை வரும் மோடிக்கு அதிமுக – பாஜக சார்பில் பலத்த வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் பிரமதர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது” என தமிழில் பதிவிட்டுள்ளார்.