×

காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு தமிழகத்திற்கு முறையாக நிதி ஒதுக்கியதா? - நாராயணன் திருப்பதி கேள்வி

 

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு முறையாக பேரிடர் நிதியை வழங்கியதா? என தமிழக பாஜக துணை தலைவர் நாரயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த வருடம் தமிழகத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 900 கோடியும், நகர்ப்புற வெள்ள தடுப்பு மேலாண்மை நிதிக்காக ரூபாய் 561.29 கோடியும் ஏற்கனவே கொடுத்து விட்டது மத்திய அரசு. மேலும், வெள்ள பாதிப்புகள் குறித்து முழு ஆய்வும் செய்து தரவுகளை மாநில அரசு விரைவில் அளித்தால் தேசிய பேரிடர் நிவாரண நிதி அல்லது உரிய துறைகளின் மூலம் நிதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.