×

அமைச்சர் பொன்முடி புரிதல் இல்லாமல் பேசுகிறார் - நாராயணன் திருப்பதி!

 

அமைச்சர் பொன்முடி அடிப்படை புரிதல் இல்லாமல் பேசுகிறார் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்காளத்தில் இருக்கக் கூடிய மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தரே இந்திய நாட்டினுடைய பிரதமர் மோடி தான் அதனுடைய வேந்தராக இருக்கிறார். இது மட்டும் எப்படி நடந்தது. ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் அவருடைய மாநிலத்தில் கூட இல்லை. மேற்கு வங்காளத்தில் உள்ள மத்திய பல்ககலைக்கழகத்தில் வேந்தராக இருக்கிறார் என்று சொன்னால், அதற்கு வழிவகுக்குற சட்டம் இதற்கு வழி வகுக்காதா? - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
 
மத்திய கல்வி பல்கலைக்கழகங்களின் ஒட்டு மொத்த அதிகாரங்களும் இந்திய குடியரசு தலைவரிடத்தில் தான் உள்ளது. ஐ ஐ டி உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களின் (Visitor) கண்காணிப்பாளர், பார்வையாளர் குடியரசு தலைவர் தான். அதாவது மாநில பல்கலைக்கழகங்களில் வேந்தருக்கு (ஆளுநர்) உள்ள அதிகாரத்தை மத்திய பல்கலைக்கழகங்களில் பெற்றவர் குடியரசுத்தலைவர்.