கருணாநிதியின் சமாதியில் கோவில் கோபுரத்தை வரைவதா? - நாராயணன் திருப்பதி கண்டனம்!
Updated: Apr 17, 2025, 13:02 IST
கருணாநிதியின் சமாதியில் கோவில் கோபுரத்தை வரைந்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது, ஓட்டு மொத்த ஹிந்துக்களை இழிவுபடுத்தும் செயல் இது என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அநியாயத்திற்கு ஒரு அளவே இல்லையா? திராவிட மாடல் அரசின் அராஜகத்திற்கு எல்லையே இல்லையா? கருணாநிதியின் சமாதியில் கோவில் கோபுரத்தை வரைந்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. ஓட்டு மொத்த ஹிந்துக்களை இழிவுபடுத்தும் செயல் இது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இந்த செயலை கண்டிப்பதோடு, சமாதியின் மீது உள்ள கோபுரத்தை அகற்ற உத்தரவிட வேண்டும். ஹிந்து விரோத திமுக அரசே, ஆலயத்தை விட்டு வெளியேறு. இந்த நாள் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சமாதி கட்ட துவங்கிய நாளாகட்டும் என குறிப்பிட்டுள்ளார்.