×

நீட் விவகாரத்தில் திமுக சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? - நாராயணன் திருப்பதி கேள்வி

 

இதுவரை நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக சட்ட ரீதியாக உச்சநீதி மன்றத்தில் என்ன, எப்படி, எப்போது முறையிட்டுள்ளது என்று கூற முடியுமா என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 1118 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 5473 கோடி ரூபாய் மதிப்புள்ள 5820 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனையெல்லாம் தெரிந்துக் கொள்ளாமல் பிரதமரும் பேசியிருக்கிறார். அதற்கு நான் ஏற்கெனவே பதில் அளித்துவிட்டேன். இன்றைக்கு பா.ஜ.க. ஆட்சியில் என்ன நடக்கிறது? தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டித் தர இயலவில்லை. நீட் மசோதாவிற்கு ஒப்புதல் தர முடியவில்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்வது அரசின் கடமையும் அல்ல, உரிமையும் அல்ல. கோவில் நிர்வாகத்தை கண்காணிக்க வேண்டிய மாநில அரசு நிர்வாகத்தை தட்டி பறித்து கொண்டு தாங்கள் செய்ததாக மார் தட்டி கொள்வது சட்ட விரோதம். உங்கள் அரசு மீட்டதாக சொல்லும் நிலங்கள், நீண்ட நாட்களாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளின் தீர்ப்புகளினாலே தான் மீட்கப்பட்டது என்ற உண்மையை உலகிற்கு சொல்லாமல், அரசே மீட்டது என்று சொல்வது தவறு. பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள  ஏகாம்பரநாதர் கோவில் நிலங்கள், மற்றும் மயிலாப்பூர் பி.எஸ்.