இனிமேலாவது உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? - நாராயணன் திருப்பதி கேள்வி
நீதிமன்றத்தின் கருத்துப்படி இனிமேலாவது அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனத்தை சென்னை உயர்நீதி மன்ற தெரிவித்துள்ளது. சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆளும் கட்சியை சார்ந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது என்? என சராமரியாக கேள்வி எழுப்பியுள்ளது உயர்நீதி மன்றம். இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை அழிக்க வேண்டும் என யாரும் எந்த கூட்டத்தையும் கூட்டுவதற்கு உரிமையில்லை என்றும் இத்தகைய பேச்சுகள் எவ்வளவு அபாயகரமானது என்பதை ஆட்சியாளர்கள் உணருவதோடு, பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், இது போன்று மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் போக்கினை ஏற்படுத்துவதை விடுத்து, உடல் நலத்திற்கு தீங்கினை ஏற்படுத்தும் மது மற்றும் போதை பொருட்களை அழிப்பது, ஊழலை ஒழிப்பது, தீண்டாமை ஒழிப்பு போன்ற சமூக சீர்கேடுகளை ஒழிப்பது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்துவது சிறந்தது என்று அறிவுறுத்தியுள்ளது.