திமுகவில் நான் சைக்கிள் கூட கேட்டதில்லை, கேட்டாலும் கிடைக்காது - நாஞ்சில் சம்பத்
Dec 5, 2025, 18:45 IST
‘நீங்களும் முதல்வராகலாம்’ என்ற புத்தகத்தை விஜய்யிடம் கொடுத்து த.வெ.கவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “கரூர் நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை தவெகவிற்கான வெற்றி என கூறியதால் திமுகவினர் என் மீது அதிருப்தியில் இருந்தனர். தி.மு.க-வில் நான் சைக்கிள் கூட கேட்டதில்லை, கேட்டாலும் கிடைக்காது. கேட்டாலும் கிடைக்காது. விஜய் சரியான பாதையில் செல்வதாக நான் பேசியதால் திமுகவினர் எனக்கு நெருக்கடி மற்றும் மிரட்டல் விடுத்தனர். என்னை கேவலமாக காதுகொடுத்து கேட்க முடியாத அளவிற்கு திமுகவினர் திட்டினார்கள். திமுகவினர் என்னுடைய வயிற்றில் அடிப்பது மாதிரி என்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்கள். தற்போது உற்சாக மனநிலையில் உள்ளேன், கடந்த கால காயங்களில் இருந்து விடுபட்டவனாக உணர்கிறேன்” என்றார்.