ஆதவ் அர்ஜூனாவை நான் குறைத்து பேசினேனா?- நாஞ்சில் சம்பத் பரபரப்பு விளக்கம்
என்னைக் களங்கப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறாது என தவெக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தைக் கூட்டி எந்த ஃபண்டும் தேவையில்லை, சாலைகள் தரமானதாக இருந்தால் மட்டும் போதும் என்று நான் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை வியந்தும் விதந்தும் பேசியிருக்கிறேன். அந்த @AadhavArjuna -வை நான் குறைத்து பேசியதாக சிலக்…
— Nanjil Sampath (@NanjilPSampath) October 25, 2026
இதுதொடர்பாக தவெக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில், "தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தைக் கூட்டி எந்த ஃபண்டும் தேவையில்லை, சாலைகள் தரமானதாக இருந்தால் மட்டும் போதும் என்று நான் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை வியந்தும் விதந்தும் பேசியிருக்கிறேன். அந்த ஆதவ் அர்ஜூனாவை நான் குறைத்து பேசியதாக சிலக் குறைப் பிரசவங்கள் செய்தி வெளியிடுவதை யாரும் நம்ப வேண்டாம். தவெக என்கிற அமைப்பில் பரப்புரைச் செயலாளராக கடமையாற்றுகிற நான், கண்ணை மூடுகிறவரை; கல்லறைக்குப் போகிற வரை இந்தக் கடமையை செய்வதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். என்னைக் களங்கப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.