×

நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றது தமிழ் சினிமாவிற்கு ஒரு இழப்பு

 

நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றது தமிழ் சினிமாவிற்கு ஒரு இழப்பு என நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.


தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி அருகே புறவழிச்சாலையில் பிரபல பிரியாணி கடையின் புதிய கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் பிரியாணி கடையை திறந்து வைத்தார்.  அதே பிரியாணி கடைக்கு பிரபல திரைப்பட நடிகை நமீதா வருகை தந்தார். நடிகை நமீதாவை காண்பதற்காக ஏறாளமான இளைஞர்கள் கடைக்கு முன்பு கூடி இருந்தனர். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நமீதா, “ புதிய திறமையான நடிகர்களை உருவாக்குவதற்காக வே சென்னையில் நடிப்பு  கற்றுக் கொள்வதற்காகவே நானும் எனது கணவரும் ஒரு பள்ளியை திறந்து பல்வேறு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் அரசியல், நடிகர் அஜித் ரேசிங் சென்று விட்டார்கள்.  புதிய மற்றும் திறமையான நடிகர்களுக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் வழங்க வேண்டும். விஜய் ஒரு சிறந்த நடிகர், சிறப்பாக நடனம் ஆடக் கூடியவர், அவர் அரசியலுக்கு சென்றது தமிழ் சினிமாவிற்கு ஒரு இழப்பு” என தெரிவித்தார்.