நல்லகண்ணுவின் உடல் சென்னை மருத்துவ கல்லூரியில் ஒப்படைப்பு
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல் சென்னை மருத்துவ கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் விவசாயிகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்ட தலைவர் நல்லகண்ணு நேற்று தனது 101 வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு சென்னையில் பாலன் இல்லத்தில் தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் வீர வணக்கம் செலுத்தப்பட்டு அவரது உடல் இன்று தமிழக அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முங்க எடுத்துச் செல்லப்பட்டு அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல் சென்னை மருத்துவ கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் 6 மாதங்கள் வேதிப்பொருள் திரவத்தில் வைக்கப்பட்டு, பிறகு மருத்துவ மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என கல்லூரி முதல்வர் சாந்தாராம் கூறியுள்ளார்.