×

வீட்டிலிருந்தே OP சீட்டு வாங்கலாம்... 'நலம் AI' WhatsApp Chatbot சேவை நாளை அறிமுகம்

 

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் நாளை (08.07.2026) உரையாடளுடன் வடிவமைக்கப்பட்ட "நலம்AI" என்ற பெயரில் WhatsApp Chatbot சேவையை மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைக்க உள்ளார்.


இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் நாளை (08.07.2026) உரையாடளுடன் வடிவமைக்கப்பட்ட "நலம்AI" என்ற பெயரில் WhatsApp Chatbot சேவையை மாண்புமிகு மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மரு.கோ.க.அருண்ராஜ் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.இச்சேவையின் மூலம் பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே தங்களின் சுய பதவி (one-time Registration) மற்றும் OP முன்பதிவை (Appointment booking) செய்து கொள்ள முடியும். இச்சேவை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலன் நெஞ்சக நோய் பிரிவில் (Department of Respiratory Medicine) சோதனை முறையில் நாளை முதல் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.