×

“2, 3 கோடி கொடுத்து சீட் பெறுபவன் கத்திரிக்கோலை வயிற்றில் வைத்து தைத்துவிட்டு போயிடுவான்...”- நயினார் நாகேந்திரன்

 

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எதற்கு பதவி விலக வேண்டும்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “2, 3 கோடி கொடுத்து மருத்துவ சீட்டை பெறுபவன் கத்திரிக்கோலை வயிற்றில் வைத்து தைத்துவிட்டு போயிடுவான்.. அப்படிப்பட்ட மருத்துவர் தேவையா..? நீட் தேர்வு போராட்டத்தில் பாலஸ்தீன நாட்டின் கொடி வைத்திருப்பவனுக்கு என்ன வேலை..? நீட் தேர்வு சுமூகமாக முடிந்து ரிசல்ட் வெளிவந்துவிட்ட நிலையில், மத்திய அமைச்சர் ஏன் பதவி விலக வேண்டும்? நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எதற்கு பதவி விலக வேண்டும்? வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அதிகாரிகள் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்குப் பிறகு நீட் தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதி இருக்கிறார்கள். தமிழக அரசின் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தக்கூடிய வினாத்தாள் கூட கசிந்துள்ளது. தேசத்திற்கு எதிரான டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ராகுல்காந்தியை கண்டித்து, நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முற்றுகையிடப்படும்” என்றார்.