×

“சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது! உடனே தலையிடுங்க”- அமித்ஷாவுக்கு நயினார் நாகேந்திரன் அவசர கடிதம் 

 

திருத்தணியில் வட மாநில இளைஞர் தாக்கப்பட்டது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.

திருத்தணி  தொடர்வண்டி நிலையத்தில்  வடமாநில இளைஞரை  4 சிறுவர்கள் கஞ்சா போதையில் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதட்டமும் விலகுவதற்கு முன்பாகவே, அதே தொடர்வண்டி நிலையத்தில் ஜமால் என்ற புடவை வணிகர் போதையில்  இருந்த 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.   ஒரே தொடர்வண்டி நிலையத்தால் அடுத்தடுத்து போதைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதும்,  அத்தாக்குதல்களைத் தடுப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றனர்.