நீட் தேர்வு விலக்கு அளிக்க நீங்கள் முன் வருவீர்களா?- நயினார் நாகேந்திரனுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன், நீட் தேர்வை ரத்து செய்தோம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். அதை நிறைவேற்றவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர், இப்போது உங்களுக்கு அதிகாரம் உள்ளது. இப்போதாவது நீட் தேர்வு விலக்கு அளிக்க நீங்கள் முன் வருவீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்து நட்டா என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த பேசிய, அமைச்சர் தங்கம் தென்னரசு, 7.5 சதவித இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது நட்டா என்று நயினார் நாகேந்திரன் கூறுகிறார். இதை எதிர் கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் பெண்களுக்கான குற்றம் 5 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பேசினார். இதற்கு பதில் அளித்த பேசிய, முதல்வர் மு.க.ஸ்டாலின், மணிப்பூர் கணக்கு சேர்த்து சொன்னால் நன்றாக இருக்கும். இந்தியாவில் தமிழகத்தில் தான் பெண்களுக்கான பாதுகாப்பும், குழந்தைகள் பாதுகாப்பும் சிறப்பாக உள்ளத என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் தான் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக குறிப்புகள் ஆதாரங்கள் உள்ளது. தரவுகளுடன் விளக்க நான் தயாராக உள்ளேன். அதை ஏற்றுக் கொள்ள தயாரா என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், தேர்தலுக்கு தான் பொங்கல் தொகுப்பு 3 ஆயிரம். மகளிர் உரிமை தொகை 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. 5 கோடை காலம் வந்தது, 28 மாதங்களுக்கும் சேர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், பாஜக 5 லட்சம் போடுகிறோம் என்று கூறியதே, அது என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார்.