"வாக்கு வங்கிக்கு ஏற்றார் போல பேசுகிறார்கள்" - திமுகவினர் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
திமுக தனது ஆட்சி முடியும் காலத்தில் தேவையில்லாத செயலில் ஈடுபட்டிருப்பது வாக்கு வங்கிக்காக ஒரு நேர்மையான நீதிபதியின் மீது இதுபோன்ற ஒரு மனு அளித்திருப்பது துரதிஷ்டவசமானது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 144 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், முன்னாள் நாகலாந்து ஆளுநர் இல கணேசன் மற்றும் இலக்கிய செல்வர் குமரி ஆனந்தன் ஆகியோர் திருவுருவ பாடத்திற்கு மலர் தூவு மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “பாரதியாரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறடு. ஆயுதம் ஏந்தி போராடிய சமயத்தில் தனது பாடல்கள் மூலம் சுதந்திர வேட்கையை தட்டி எழுப்பிய ஒரு மாவீரர் மகாகவி பாரதியார். இந்த நாட்டின் அதிகாரங்கள் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது , நீதித்துறை, நிர்வாக துறை, நிதித்துறை இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் தான் நாடு வளம் பெறும். இவற்றுக்குள் மோதல் ஏற்பட்டால் குறிப்பாக நீதித்துறைக்கும் நிர்வாக துறைக்கும் மோதல் ஏற்பட்டால் பல்வேறு பிரச்சனைகள் வரும் ஆகையால் எந்த செயலையும் செய்ய முடியாது. இனிமேல் இது சார்ந்து பேசுபவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவின்போது மெரினா அவர் சமாதி ஏற்படுத்துவதற்கு திமுகவினர் நீதிமன்றத்தை நாடினர். அப்பொழுது அதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, நீதிமன்ற தீர்ப்பை அவர் செயல்படுத்தினார்.
திமுகவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் ஒன்று பேசுகிறார்கள் அல்லது அவர்கள் வாக்கு வங்கி பாதிப்பு ஏற்படுத்தினால் மற்றொன்று பேசுகிறார்கள், நீதிமன்றத்திற்கும் நிர்வாகத்திற்கும் ஏற்படும் மோதல் போக்கை தவிர்க்க வேண்டும். நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதனை செயல்படுத்த வேண்டும். நீதிபதி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எம்பிக்கள் மனு கொடுத்திருப்பது தவறான முன் உதாரணம் , நாடு மிக மோசமான சூழ்நிலை சந்திக்க நேரிடும், மோதல் போக்கினை கைவிட வேண்டும். திமுக தனது ஆட்சி முடியும் காலத்தில் தேவையில்லாத செயலில் ஈடுபட்டிருப்பது வாக்கு வங்கிக்காக ஒரு நேர்மையான நீதிபதியின் மீது இதுபோன்ற ஒரு மனு அளித்திருப்பது துரதிஷ்டவசமானது” என தெரிவித்தார்.