“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” - நயினார் நாகேந்திரன் பேட்டி
Jun 5, 2026, 17:29 IST
அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதால் தமிழக பாஜகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் கட்சி சித்தாந்த அடிப்படையிலான கட்சி, பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியது குறித்து கருத்து கூற முடியாது. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியல் இயக்கம் தொடங்க ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. மாநில உரிமைக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அண்ணாமலை தவறாக குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழின் பெருமை பற்றி பேசுவார். நமது செப்பேடுகளை கூட மீட்டு கொண்டுவந்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக்கும்...இப்போதைய தவெக ஆட்சிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை” என்றார்.