×

சனிப்பெயர்ச்சி போல் திமுக ஆட்சியும் பெயர்ந்து செல்லும் - நயினார் நாகேந்திரன்..!

 
திருநள்ளாறில் சுவாமி தரிசனம் மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக தெரிவித்தார்.

நாங்குநேரியை தொடர்ந்து சிவகங்கையில் நடந்த தாக்குதல் சம்பவம் வேதனைக்குரியது என்றும், தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்ததால் மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

திமுக ஆட்சியில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், சனிப்பெயர்ச்சி போல் திமுக ஆட்சியும் பெயர்ந்து செல்லும் என தெரிவித்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்படும்போது பொதுமக்கள் வாழ்வு சிறக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.