#BREAKING "நாகர்கோவில் காசி சாகும் வரை சிறையிலேயே இருக்க வேண்டும்" - அதிரடி தீர்ப்பு
நாகர்கோவில் காசி வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி (27). இவர் பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் நெருங்கி பழகி, அவர்களை ஆபாச படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் நேசமணி நகர், நாகர்கோயில் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. இதனையடுத்து காசியை கைதுசெய்த போலீசார், ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் காசிக்கு, ஆயுட்காலம் முழுவதும் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதி செய்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையில் தலையிட தேவையில்லை எனக் கூறியுள்ளது.