☰
×

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக ரத்து..!

 

'அக்வான்' புயல் சின்னம் காரணமாக வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் பயணிகள், கப்பல் பணியாளர்கள் மற்றும் கப்பலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாகை -இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ள கப்பல் நிர்வாகம், புயல் கரையை கடந்த பின்னரும், வானிலை சீரடைந்ததும் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.