வலைவீசி தேடும் குடும்பம் - மாலையோடு தலைதெறிக்க ஓடிவந்த காதல் `ஜோடி’
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி உயிருக்கு பயந்து கழுத்தில் மாலையோடு நாகை மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருச்சேறை இஞ்சிக்கொள்ளை சேர்ந்த ஜெகன் என்பவரும், செம்மங்குடி பகுதியைச் சேர்ந்த ஜனனி என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும் நாகப்பட்டினம் வந்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமணத்தை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் கடுமையாக கோபம் அடைந்து இருவரையும் தேடியுள்ளனர்.
இதையறிந்த காதல் ஜோடி உயிருக்கு பயந்து நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் தங்கள் உயிருக்கு எந்த ஆபத்து வந்தாலும் பெண்ணின் உறவினர்கள்கள் காரணம் என்றும் அவர்களிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என மனு அளித்தனர். பின்னர் காவல் நிலைய வாசலிலே காதல் ஜோடி மாலை மாற்றிக் கொண்டனர் இச்சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.