என்னையவே விலக சொல்வீர்களா?- கட்சி நிர்வாகிகளை கடிந்துகொண்ட சீமான்
தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளரான அரிமா செந்தில்நாதனின் செயல்பாடுகளுக்கு எதிராக மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்த அரிமா நாதன் மீது ஏகப்பட்ட பாலியல் புகார் உள்ளது. பல முறை இதை கட்சி பெண் பெறுப்பாளர்கள் சீமானிடம் எடுத்து சொல்லி அவனை கட்சியை விட்டு நீக்க சொன்ன போதும் சீமான் அவனை நீக்கவே இல்லை
— கபிலன் (@_kabilans) July 26, 2026
இதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கட்சி பொறுப்பாளர்கள் என்னிடம் சொல்லி இதை வெளியே கொண்டு வர… https://t.co/wdAZusa2Jv pic.twitter.com/m5ygtdwTDM
தருமபுரி மண்டல நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அரிமா செந்தில்நாதனை நீக்கக் கோரி மாவட்ட கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் மற்றும் சீமானின் எதிர்வினை அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரிமா செந்தில்நாதனை நீக்குமாறு தருமபுரி மாவட்ட நாதகவினர் சீமானுக்கு நெருக்கடி கொடுப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிர்வாகிகளின் தொடர் அழுத்தத்த and எதிர்ப்புகளுக்கு இடையே, "நாளை என்னையே விலகச் சொல்வீர்களா?" என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளது போன்ற தகவல் மற்றும் விவாதங்கள் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்க்கொடி தூக்குவோர் அப்படியே வேறு ஏதாவது கட்சியில் போய் சேர்ந்துவிட வேண்டியதுதானே? நாதகவில் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடக்க வேண்டும் என சீமான் கண்டிப்புடன் பேசும் ஆடியோ வைரலாகிவருகிறது.