“வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் தருகிறேன்”- சீமான்
வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் தருகிறேன் என கோவில்பட்டியில் பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இலவசங்கள் குறித்து விமர்சனம் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை இன்று மேற்கொண்டார். அப்போது பேசிய சீமான், “நான் நீங்கள் வாழ்கின்ற இடத்திலே அரசாங்க வேலை தருகிறேன். அவன் டோக்கனுக்கு 8000 ரூபாய் தருகிறேன் என சொன்னால் நம்பர, பத்தாயிரம் சொன்னாலும் நம்புர, பிரிட்ஜ் தர்றாங்கனு சொன்னாலும் நம்பர, தாலிக்கு தங்கம் சொன்னாலும் நம்பர, ஆயிரம் சொன்னாலும் நம்பர 2000 சொன்னாலும் நம்பர.... நான் சொல்றேன் வீட்டுக்கு வீடு ஹெலிகாப்டர் தரேன்னு சொல்றேன் நம்பு! ஒவ்வொரு குடும்பப் பெண்ணுக்கும் ஒரு கிலோ தங்கம் தருகிறேன் சொல்றேன் நம்பு! நான் படித்தவன் படிக்காதவனுக்கு அரசு வேலை தருகிறேன் என சொல்கிறேன்... எப்படி தாரேன்னு சொல்ற ஏன்? நம்ப மாட்டேங்குற” என ஒருமையில் பேசினார்.