அமைச்சர் பிடிஆர் வீட்டின் அருகிலே நாம் தமிழர் நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை
Jul 16, 2024, 12:00 IST
நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வடக்கு துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த 4 பேர் கொண்ட கும்பல், ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் உள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற தல்லாகுளம் போலீசார், பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றினர். மேலும் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.