விஜய்யுடன் வரும் மர்ம சூட்கேஸ்! உள்ளே என்ன இருக்கும் தெரியுமா?
விஜய் பிரசாரத்திற்கு செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களின் கவனம் முழுவதும் விஜய்யின் அருகில் வரும் ஒரு குறிப்பிட்ட பவுன்சரின் மீதே பதிந்துள்ளது. அந்த பவுன்சரின் கையில் எப்போதும் ஒரு கருப்பு நிற சூட்கேஸ் இருப்பதே இதற்கு காரணமாகும். "அது என்ன சூட்கேஸ்?
நெட்டிசன்கள் நினைப்பது போல அந்த சூட்கேஸில் பணமோ, கோப்புகளோ அல்லது விஜய்யின் தனிப்பட்ட பொருட்களோ இல்லை. உண்மையில் அது ஒரு சூட்கேஸ் வடிவில் இருக்கும் பாதுகாப்புக் கவசம் ஆகும். பொதுவாக உலக தலைவர்கள், நாட்டின் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அதிக அச்சுறுத்தல் உள்ள முக்கிய விஐபி-க்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் கமாண்டோக்களின் கைகளில் இந்த பிரத்யேக சூட்கேஸை பார்க்க முடியும். அதையே தான் தற்போது விஜய்யின் பாதுகாப்பிற்காக அவரது பவுன்சர்களும் கையில் வைத்துள்ளனர்.
இந்த சூட்கேஸ் கெவ்லர் எனப்படும் மிக உறுதியான புல்லட் ப்ரூஃப் மெட்டீரியலால் ஆனது. யாராவது எதிர்பாராத விதமாக துப்பாக்கியால் சுட முயன்றால், பவுன்சர் உடனடியாக சூட்கேஸில் உள்ள ஒரு பட்டனை அழுத்துவார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த சூட்கேஸ் பெரிய ஷீல்டு போல விரிவடைந்து, துப்பாக்கி குண்டுகளிலிருந்து விஜய்யை முழுமையாக காப்பாற்றும். பிரசாரக் கூட்டங்களில் விஜய்யை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் பல நேரங்களில் பூக்கள், துண்டுகள், அல்லது தற்செயலாக ஏதேனும் கடினமான பொருட்களை மேடையை நோக்கி வீசுவதுண்டு. இதுபோன்று மேடையை நோக்கி வீசப்படும் பொருட்களிலிருந்து விஜய்யைக் காப்பாற்ற இந்த ஷீல்டு பயன்படுகிறது. சில மேம்படுத்தப்பட்ட பேலிஸ்டிக் சூட்கேஸ்களுக்குள், பாதுகாப்பிற்கான ரகசிய கருவிகள் மற்றும் ஆயுதங்களும் வைத்திருக்கும் வசதி இருக்கும். எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் விஐபியை பாதுகாப்பாக அழைத்து செல்ல இது பெரிதும் உதவுகிறது.