×

கோல்டு மெடலிஸ்ட்; அம்மா சாப்பிட்டு வீட்டீர்களா – சென்னை அரசு டாக்டரின் உயிரைப் பறித்த பகீர் பின்னணி

சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி முதுகலை மாணவர்கள் விடுதியின் மாடியிலிருந்து குதித்து டாக்டர் கண்ணன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது. டாக்டர் கண்ணனின் சடலத்தைக் கைப்பற்றிய வண்ணாரப்பேட்டை போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. டாக்டர் கண்ணனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக்கூறி அவரின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவக்கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாக்டர் கண்ணனின் சடலம் பிரேத பரிசோதனை செய்யும் போது
 

சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி முதுகலை மாணவர்கள் விடுதியின் மாடியிலிருந்து குதித்து டாக்டர் கண்ணன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது. டாக்டர் கண்ணனின் சடலத்தைக் கைப்பற்றிய வண்ணாரப்பேட்டை போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. டாக்டர் கண்ணனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக்கூறி அவரின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவக்கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாக்டர் கண்ணனின் சடலம் பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ எடுக்க வேண்டும். ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் இல்லாமல் வெளியிலிருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்களை வலியுறுத்தினர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் டாக்டர் கண்ணனின் பெற்றோர் முருகேசன், முத்துலட்சுமியும் கலந்து கொண்டனர். முருகேசன் கூறுகையில், என்னுடைய மகன் கண்ணனுக்கு டாக்டராகுவதே லட்சியம். அதனால் நல்ல மதிப்பெண் எடுத்து தஞ்சாவூரில் டாக்டருக்கு படித்தான். கோல்டு மெடலிஸ்ட். அதனால்தான் ஆர்த்தோ முதுகலை படிப்பிற்கு ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. ஜூன் மாதம்தான் சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் முதுகலை மாணவனாக கண்ணன் சேர்ந்தார். கடந்த 19-ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு அவன் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்துவிட்டதாக போனில் பேசினான்.

அப்போதுகூட அவர் நார்மலாகத்தான் பேசினான். அவனுக்கு சமீபத்தில்தான் திருமணம் நிச்சயம் நடந்தது. அந்தப் பெண்ணிடமும் கண்ணன் போனில் பேசியுள்ளான். அதன்பிறகு அவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போனில் எனக்கு தகவல் தெரிவித்தார்கள். இது நம்பும்படியாக இல்லை. அதனால் என் மகன் டாக்டர் கண்ணனின் மரணம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளோம். நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளோம். திருமணக் கோலத்தில் அவனைப் பார்க்க ஆசைபட்டேன். அதற்குள் இப்படி நடந்துவிட்டதே. என்னுடைய சாமி என்கிட்ட போனில் பேசும் போது எதுவும் சொல்லலேயே என்றவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.


அவருக்கு அங்கிருந்தவர்கள் ஆறுதல் கூறினர். டாக்டர் கண்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளோம். போலீசார் எப்.ஐ.ஆர் போட்டுள்ளார்கள். டீன், பேராசிரியர்கள் மீது சந்தேகம் உள்ளது. அதை மூடி மறைத்து விட்டார்கள். போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் கல்வி கொள்ளை நடந்துக் கொண்டிருக்கிறது. எம்.டி சீட்டுக்கு 2 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாக்டர் கண்ணனுக்கு மெரிட் அடிப்படையில் சீட் கிடைத்தது. இந்தச் சமயத்தில் அவர் இறந்துள்ளதால் அவருக்கு அடுத்து சீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். வடமாநிலத்திலும் தமிழகத்தில் ஐஐடியில் கல்வி கொலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. கல்வி கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. 11.30 மணியளவில் டூயூட்டி முடித்துவிட்டு விடுதிக்குச் சென்றிருக்கிறார். அப்போது ப்ரொக்கலுக்காக அவர் செய்து வைத்திருந்தவைகள் சேதமடைந்துள்ளன. அதனால் ஏற்பட்ட தகராறில் அவர் தாக்கப்பட்டிருக்கிறார். காவல் துணை கமிஷனர், போலீஸார் டாக்டர் கண்ணனை சொந்த மகனாக கருதுகிறோம். அதனால் உங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை செய்வதாகக் கூறியுள்ளனர். போஸ்ட் மார்ட்டத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும். டீன் மீதும் பேராசிரியர்கள் சிலர் மீது புகார் கொடுத்துள்ளோம். பணி முடிந்த அரை மணிநேரத்தில் டாக்டர் கண்ணன் மரணம் அடைந்துள்ளனர். இது, முழுக்க முழுக்க கொலை என்றார்.


டாக்டர் கண்ணனின் உறவினர்கள் வைத்த கோரிக்கையின் படி அவரின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப்பிறகு அவரின் சொந்த மாவட்டமான திருப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவ மேல்படிப்பிற்காக சென்னை வந்த டாக்டர் கண்ணன், சடலமாக ஊருக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவரின் உறவினர்கள் கதறி அழுதனர். டாக்டர் கண்ணனின் மரணத்துக்கு என்ன காரணம் என போலீசாரிடம் விசாரித்தோம். டாக்டர் கண்ணனின் அப்பா முருகேசன் கொடுத்த புகாரில், தன்னுடைய மகனின் வலது தொடையிலும் கைகளில் மட்டுமே காயங்கள் உள்ளன. மாடியிலிருந்து கீழே விழுந்திருந்தால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருக்கும். மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திலிருந்து கொடுக்கப்பட்ட தகவல் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளது. மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளார். அதனால் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.

டாக்டர் கண்ணனின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை வாசவி நகராகும். இவருக்கு ஒரு சகோதரியும் சகோதரனும் உள்ளனர். டாக்டர் கண்ணன், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 2013 – 2019-ம் ஆண்டு வரை படித்துள்ளார். அவர் 3-வது மாடியிலிருந்து விழுந்தபோது கொரோனா டிரஸ் அணிந்திருந்ததாகவும் மாணவர்கள் விடுதியில் சண்டை நடந்ததாகவும் முருகேசன் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதனால் டாக்டர் கண்ணன் தங்கியிருந்த விடுதியில் விசாரித்துவருகிறோம். பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வந்தபிறகே அவரின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்றனர்.

டாக்டர் கண்ணன், அவரின் அம்மா முத்துலட்சுமியிடம் இறப்பதற்கு முன் இரவு 10 மணியளவில் போனில் பேசியுள்ளார். அப்போது அம்மா சாப்பிட்டீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு முத்துலட்சுமி, நான் சாப்பிட்டு விட்டேன். நீ சாப்பிட்டீயா சாமி என்று கேட்டுள்ளார். அதற்கு அம்மா நான் சாப்பிட்டு விட்டு இப்போதுதான் ஹாஸ்டலுக்கு போய் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதுதான் டாக்டர் கண்ணன் பேசிய கடைசி வார்த்தை என்று முத்துலட்சுமி சொல்லியடி பிணவறை முன் கதறி அழுதுக் கொண்டிருந்தார்.

டாக்டர் கண்ணனின் அப்பா புகாரில் கூறியிருப்பது போல உண்மையிலேயே சம்பவத்தன்று விடுதியில் சண்டை நடந்ததா அதனால்தான் அவர் 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்தாரா என்ற கேள்விகளுக்கு மட்டும் விடை கிடைத்துவிட்டால் போதும். டாக்டர் கண்ணனின் இந்த மரணம் சக டாக்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ். செல்வம்