×

மைசூர் அரண்மனை திங்கட்கிழமை மீண்டும் திறப்பு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முதன்முதலில் ஊரடங்கு அமலுக்கு வந்த போது, மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் 22ம் தேதி வரை அரண்மனை தற்காலிகமாக மூடப்பட்டு, பின் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் அரண்மனை திறக்கப்பட்டது. இந்நிலையில் மைசூரு அரண்மனை ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று உறுதியானதால் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றைய தினமே மைசூரு அரண்மனை மூடப்பட்டது. தொடர்ந்து பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மைசூரு
 

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முதன்முதலில் ஊரடங்கு அமலுக்கு வந்த போது, மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் 22ம் தேதி வரை அரண்மனை தற்காலிகமாக மூடப்பட்டு, பின் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் அரண்மனை திறக்கப்பட்டது.

இந்நிலையில் மைசூரு அரண்மனை ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று உறுதியானதால் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றைய தினமே மைசூரு அரண்மனை மூடப்பட்டது. தொடர்ந்து பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மைசூரு அரண்மனைப் பகுதியில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தூய்மை பணிகள் முடிந்து வரும் திங்கட்கிழமை முதல் அரண்மனை திறக்கப்படவுள்ளது.