×

"என் குழந்தைதான் Priority!" – பிக்பாஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜாய் கிரிசில்டா!

 

தமிழ் சின்னத்திரையின் மிக பிரம்மாண்டமான மற்றும் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவான ‘பிக்பாஸ் தமிழ்’ தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பத்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது. புதிய ஆளுமைகள், எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அனல் பறக்கும் மோதல்கள் என புத்தம் புதிய கலவையோடு இந்த பத்தாவது சீசன் அமையவுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 மிகப் பிரம்மாண்ட தொடக்க விழா வரும் செப்டம்பர் 6 அன்று மாலை 6 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. வழக்கம் போல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு மகிழலாம். இந்த முறை ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்நிகழ்ச்சி ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

வீட்டிற்குள் நுழையப்போகும் பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தற்போதே காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த நிலையில், பிக்பாஸ் தமிழ் 10-வது சீசனில் பங்கேற்கவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு ஆடை வடிவமைப்பாளரும், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியுமான ஜாய் கிரிசில்டா விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, "நான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் குழந்தை ராகா இன்னும் மிகவும் சிறியவன். அவனை விட்டுவிட்டு செல்வது சரியாகத் தோன்றவில்லை. எனவே இந்த வாய்ப்பை நிராகரித்தேன்; என்னைப் பொறுத்தவரை என் குழந்தைதான் முன்னுரிமை (Priority)" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.