×

முத்தூட் கொள்ளை சம்பவம் : நாளை ஓசூர் அழைத்து வரப்படும் கொள்ளையர்கள்!

முத்தூட் நிறுவன கொள்ளை வழக்கில் கைதான 9 பேர் நாளை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பூப்பு புகுந்த மர்மநபர்கள் சிலர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியரை துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.12 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பட்டப்பகலில் திரைப்படத்தில் வருவது போல கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கிருஷ்ணகிரி போலீசார் கொள்ளையர்கள்
 

முத்தூட் நிறுவன கொள்ளை வழக்கில் கைதான 9 பேர் நாளை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பூப்பு புகுந்த மர்மநபர்கள் சிலர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியரை துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.12 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பட்டப்பகலில் திரைப்படத்தில் வருவது போல கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கிருஷ்ணகிரி போலீசார் கொள்ளையர்கள் 9 பேரை கைது செய்தனர். இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் முத்தூட் நிறுவன கொள்ளை வழக்கில் கைதான 9 பேரும் நாளை ஓசூர் அழைத்து வரப்படுகின்றனர். ஹைதராபாத் சமசத்புர் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் முடிவெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 9 பேரிடம் இருந்து 25 கிலோ நகை, பணம் துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் ஜனவரி 22 ரூபாய் 12 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி போலீசார் அவர்களை 18 மணிநேரத்தில் பிடித்தது குறிப்பிடத்தக்கது.