×

பிரதமரா? பிரிவினைவாதியா?- முத்தரசன் பேட்டி

 

நாட்டின் பிரதமர் என்கிற மிக உயர்ந்த பொறுப்பை உணராமல் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய வகையில் மாநில மக்களுக்கு இடையே மோதலை உருவாக்கக்கூடிய வகையில் மோடி செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் மே தின கொடியை ஏற்றி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மே தினவிழாவை கொண்டாடுகிறார்கள் தொழிலாளர் வர்க்கத்திற்கு இந்தியாவில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடுவதற்கு சபதம் ஏற்கக்கூடிய நாளாகும் என்று கூறிய அவர், நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி உயிர் தியாகம் செய்து சித்திரவதை அனுபவித்து உரிமை சட்டங்களை பெற்றது என்றார்.

அத்தகைய சட்டங்களை எல்லாம் இப்போது ஒன்றியத்தில் அமைந்துள்ள பாசிச பாஜக அரசு அதை தகர்த்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நான்கு சட்ட திருத்தங்களாக மாற்றி இருப்பதை எதிர்த்து போராடி வருகிறோம் அந்த தட்டங்களை திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடரும் என்ற அவர் நாட்டில் ஒற்றுமை ஒருமைப்பாடு மிகவும் முக்கியம் பல்வேறு மதங்களையும் கலாச்சாரங்களையும் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய வகையில் நாட்டின் பிரதமர் அவர் வகிக்கும் பிரதமர் என்கிற மிக உயர்ந்த பொறுப்பை உணராமல் மாநில மக்களுக்கு இடையே மோதலை உருவாக்கக்கூடிய வகையில் செயல்படுவது கண்டனத்திற்குரியது என்றார். உத்திரப்பிரதேச மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் ஆற்றி உள்ள உரை மிக மிக மோசமானது மிக மிக கண்டிக்கத்தக்க உரை என்றும் நரேந்திர மோடி நாட்டின் பிரதமரா அல்லது பிரிவினை வாதியா என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு அவரின் உரை அமைந்துள்ளது, நாட்டின் ஒற்றுமைக்கு கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போராடும் என்றார். பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இல்லை என்ற ஒன்றிய அரசு கூறுகிறது ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் உணவகங்கள் மூடப்பட்டு உள்ளது இன்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது வரும் 4ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என கூறினார்.