×

‘2 ஆண்டுகள் மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும்’ மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என அரசின் உத்தரவு செல்லும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் உதவி உதவி பெரும் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், கட்டாயம் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணி புரிய வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 276 மாணவ, மாணவிகள், அகில இந்திய மருத்துவ படிப்பு கொள்கையில் இது போன்ற எந்த உத்தரவும் இல்லை
 

மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என அரசின் உத்தரவு செல்லும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் உதவி உதவி பெரும் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், கட்டாயம் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணி புரிய வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 276 மாணவ, மாணவிகள், அகில இந்திய மருத்துவ படிப்பு கொள்கையில் இது போன்ற எந்த உத்தரவும் இல்லை என்றும் இது சட்டவிரோதமான உத்தரவு என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

கடந்த ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 2 ஆண்டுகள் பணிபுரிய அவசியம் இல்லை என அரசின் உத்தரவை தள்ளுபடி செய்தார். நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் இன்று தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமையிலான அமர்வில் அந்த மனு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய அவசியம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். தொடர்ந்து, மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகள் பணிபுரிந்தால் தான் அவர்களது சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் என்ற அரசின் உத்தரவு செல்லும் என உத்தரவிட்டனர். மேலும், மாணவர்க்ளுக்கு 2 ஆண்டுகளுக்குள் வேலை வழங்க முடியவில்லை என்றால் சான்றிதழ்களை திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.