விஜயிடம் இருந்து இஸ்லாமியர்கள் தள்ளி இருக்க வேண்டும்- அகில இந்திய முஸ்லிம் ஜமாத்
தவெக தலைவர் விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும் என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் சகாபுதீன் ராஜ்வி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அகில இந்திய முஸ்லீம் ஜமாத் சகாபுதீன் ராஜ்வி வெளியிட்டுள்ள வீடியோவில், “சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டார். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இப்தார் விருந்துக்கு விஜய் அழைத்து வந்துள்ளார். தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் விஜயை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஜயின் செயல்பாடுகள் இருக்கின்றனர். ஆகவே அவரிடமிருந்து இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும். விஜய் முஸ்லிம் விரோத, அவரது பின்னணி மற்றும் கடந்த கால நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு எதிரான பல நிகழ்வுகளை பிரதிபலிக்கின்றன.