விஜய் தலைமையில் தவெக அரசு அமைய வேண்டி மெக்காவில் பெண்கள் பிரார்த்தனை
Dec 2, 2025, 22:02 IST
சவுதி அரேபியாவின் மெக்காவில் இஸ்லாமிய பெண்கள், தமிழ்நாட்டில் தலைவர் விஜய் தலைமையில் தவெக அரசு அமைவதற்காக பிரார்த்தனை செய்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, கட்டியை வலுப்படுத்துவது, வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது, களத்திற்குச் சென்று மக்களை சந்திப்பது என சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகின்றன. அந்தவகையில் கடந்த ஓன்றரை ஆண்டுக்கு முன்பு புதிதாக கட்சி தொடங்கி, 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காணவுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.