×

இசைஞானி இளையராஜா  80வது பிறந்த நாள்  - தினகரன் வாழ்த்து

 

இசைஞானி இளையராஜா அவர்களின் 80 ஆவது பிறந்த நாளுக்கு தினகரன் வாழ்த்து கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இசையை திரைப்படங்கள் வழியே உலகம் முழுக்கக் கொண்டு சென்று சர்வதேச இசை உலகில் புகழ் பெற்று விளங்கும் இசைஞானி இளையராஜா அவர்களின் 80 ஆவது பிறந்த நாள் இன்று.

தனது இசையால் அனைத்து உள்ளங்களையும் வசப்படுத்தி, அனைவரது உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் திரு. இளையராஜா அவர்கள் நீடூடி வாழ வேண்டும் என வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றேன்.

 

null

அதேபோல் காங்கிரஸ் எம்எல்ஏ  செல்வப்பெருந்தகை , இந்திய திரையுலகில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, சாதனை படைத்து, தொடர்ந்து இசைப்பணி ஆற்றி வரும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.